ஹவலொக் ஸ்போர்ட்ஸ் CR&FC உடனான போட்டியில் வெற்றி

மொபிடெலின் அனுசரணையுடன் ஹாவிஸ் என அறியப்படும் ஹவலொக் ஸ்போர்ட்ஸ் க்ளப் (ஹவலொக் விளையாட்டுக் கழகம்) இனர், அவர்களின் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை ஹவலொக் பார்க் இல் இடம் பெற்ற கழகங்களுக்கிடையிலான லீக் ரக்பி, இரண்டாவது சுற்றில் CR&FC உடனான போட்டியில் 24க்கு 31 என்ற எண்ணிக்கையில் ஹவலொக் ஸ்போர்ட்ஸ் க்ளப் வெற்றிபெற்றது.

இப் போட்டித் தொடரில் முதலிருந்தே ஹவலொக் ஸ்போர்ட்ஸ் க்ளப் இனர் அவர்களது உச்ச விளையாட்டுத் திறமைகளை களத்தில் காட்டி வந்தனர். போட்டிகளுக்கு சற்று நேரத்துக்கு முன் 19:19 என்று நிலைபெற்றிருந்த புள்ளிகளானது ஹவலொக் ஸ்போர்ட்ஸ் க்ளப் இன் மிதும் ஹபுகொட மற்றும் துஷ்மந்த பிரியதர்ஷன ஆகியோரின் இரண்டு ட்ரைகளுடன் 31:24 என்ற இறுதிப் புள்ளிகளைப் பெற்று ஹவலொக் ஸ்போர்ட்ஸ் க்ளப் இறுதி நிலைக்கு உயர்வடைந்து போட்டியை முடித்துக் கொண்டது.

 மொபிடெலின் பிரதம நிறைவேற்று அதிகாரியான நலின் பெரேரா இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்ததுடன் ஹவலொக் ஸ்போர்ட்ஸ் க்ளப் இன் இன்னுமொரு வெற்றியைப் பாராட்டி மகிழ்த்திடவும் வருகை தந்திருந்தார். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவதன் மூலம் மொபிடெல் ஆனது நாட்டில் விளையாட்டுத் திறமை கொண்ட அடுத்த தலைமுறையினரை வலுப்படுத்துகிறது.

Sat, 01/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை