ரூ.700 சம்பள அதிகரிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் அரசாங்கம் முறையாக தலையிடாததாலே 1,000 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனதாக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 

 மலையகத்தில் தமிழ் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் இருந்தும் தோட்ட மக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது. தோட்டப் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.ம.சு.முபாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பங்களிப்புத் செய்யத் தயாராக இருந்தும் ஆளும் தரப்பு எம்.பிக்கள் இதனை சரிவர பயன்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.  

700 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க உடன்பாடு காணப்பட்டிருப்பது குறித்து தினகரனுக்கு கருத்து தெரிவித்த அவர், 700 ரூபா அடிப்படை சம்பளத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது. தோட்ட மக்களும் இதனை ஏற்கவில்லை.தோட்டக் கம்பனிகளை அழைத்து உரியவாறு பேசியிருந்தால்1,000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றிருக்கலாம். பெருந்தோட்ட அமைச்சரும் கம்பனிகளுக்கு சார்பாகவே இருந்தார்.  

தோட்ட மக்களின் சம்பளப் பிரச்சினைக்காக ஒரு அமைச்சரவை பத்திரம் கூட முன்வைக்கப்படவில்லை.

ஆளும் தரப்பிலுள்ள எம்.பிக்கள் உட்பட எமது தரப்பிலுள்ள தோட்டப் பிரதேச எம்.பிக்களின் இணைந்திருந்தால் 25 எம்.பிக்களின் ஆதரவுடன் இந்த சம்பளப் போரட்டத்தை முன்னெடுத்திருக்கலாம். அமைச்சு பதவிகளை கைவிட்டு பாராளுமன்றத்தை பகிஷ்கரித்து கடும் அழுத்தம் கொடுத்திருந்தால் 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வென்றிருக்கலாம்.  

மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட குறுகிய காலத்தில் கம்பனிகளை அழைத்து சம்பள உயர்வு பெற தலையீடு செய்தார். மீண்டும் எமது ஆட்சி வந்ததும் 1,000 ரூபா கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.(பா) 

(ஷம்ஸ் பாஹிம்) 

Mon, 01/28/2019 - 09:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை