இஸ்ரேலுடன் கூட்டுச்சேர்ந்த 45 பேர் காசாவில் கைது

இஸ்ரேலுடன் கூட்டுச்சேர்ந்த குற்றச்சாட்டில் காசா பகுதியில் 45 பேரை அங்கு ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பு கைது செய்துள்ளது. கடந்த நவம்பரில் இஸ்ரேல் இராணுவம் காசாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்தே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சமூக ஊடகம் மற்றும் தொலைபேசி மூலம் இஸ்ரேலால் பணியமர்த்தப்பட்டிருப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

“கிழக்கு கான் யூனிஸில் கடந்த நவம்பரில் இடம்பெற்ற சம்பவத்திற்கு பின்னர் அது தொடர்பான விசாரணைகளில் 45 முகவர்கள் கைது வெய்யப்பட்டனர்” என்று ஹமாஸ் உள்துறை அமைச்சின் பேச்சாளர் இயாத் அல் பொசூம் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் இராணுவம் ஊடுருவி நடத்திய தாக்குதலில் 7 ஹமாஸ் போராளிகள் மற்றும்இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டனர்.

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை