ஆஸி. வெளிநாட்டு தூதரகங்களில் சந்தேகத்திற்கு இடமான பொதிகள்

அவுஸ்திரேலியாவில் சில வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சந்தேகத்துக்குரிய பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மெல்பர்ன் நகரில் அமெரிக்க, பிரிட்டிஷ், சுவிஸ், ஜெர்மானிய, பிரான்ஸ், இத்தாலி தூதரகங்களுக்கு அத்தகைய சந்தேகத்துக்குரிய பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

இந்தியத் தூதரகத்திலும், அமெரிக்கத் தூதரகத்திலும் தீயணைப்பாளர்களும், மருத்துவ உதவியாளர்களும் இருக்கும் காட்சிகளை, ‘9 நியூஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்டது.

யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. இந்தச் சம்பவங்கள் குறித்து விக்டோரியா மாநிலக் பொலிஸார் எந்த கருத்தும் வெளியிடவில்லை.

மெல்பர்ன் நகரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்குச் சந்தேகத்துக்குரிய பொட்டலம் வந்ததைத் தூதரகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

பல டஜன் வெளிநாட்டு அலுவலகங்களுக்கு இவ்வாறான பொதிகள் கிடைத்திருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கும் உள்நாட்டு ஊடகங்கள், இதில் அஸ்பெஸ்டாசிஸ் கனிமப் பொருள் இருந்ததாக சில ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்படும் இந்தப் பொருள் புற்றுநோய் மற்றும் ஏனைய சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியதாகும்.

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை