ரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி

காத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும் ரிதிதென்னையிலுள்ள பிர்லியண்ட் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் 25 ம் திகதி ரிதிதென்ன பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் ரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டுக்கழகம் 3 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.

நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களைக் கொண்ட இந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகம் 10 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டுக்கழகம் 8 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் 3 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Wed, 01/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை