நாளுக்கு 2.5 பில். டொலராக செல்வந்தர் வருமானம் உயர்வு

உலகச் செல்வந்தர்களின் மொத்தச் செல்வம் கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும், நாளுக்கு 2.5 பில்லியன் டொலர் உயர்ந்ததாக ஒக்ஸ்பேர்ம் அறநிறுவனத்தின் அண்மைய அறிக்கை தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான அமசோன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பெஸோஸின் செல்வம் 112 பில்லியன் டொலராக அதிகரித்தது.

அது, எத்தியோப்பியாவின் மொத்த சுகாதாரச் செலவின ஒதுக்கீட்டுக்குச் சமம்.

செல்வந்தர்களின் வளம் பெருகிய அதே சமயத்தில் வசதி குறைந்தவர்கள் பட்டியலில் இருந்த 3.8 பில்லியன் பேரின் செல்வம் 11 வீதம் குறைந்துள்ளது.

செல்வந்தர்கள், ஏழைகள் ஆகியோருக்கு இடையே உள்ள இடைவெளி அதிகரிப்பதால் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக ஒக்ஸ்பேர்ம் வலியுறுத்தியது. அது பொருளாதாரத்தை சேதப்படுத்துவதோடு பொதுமக்களிடையே சினத்தைத் தூண்டுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டது. ஏற்றத்தாழ்வைச் சரிசெய்ய செல்வந்தர்கள் மீது விதிக்கப்படும் வரிகள் உயர்த்தப்படவேண்டும் என்று அது அரசாங்கங்களைக் கேட்டுக்கொண்டது.

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை