சிம்பாப்வே கடன் கோரிக்கை: தென்னாபிரிக்கா நிராகரிப்பு

சிம்பாப்வேயின் 1.5 பில்லியன் டொலர் அவசர கடன் கோரிக்கையை தென்னாபிரிக்கா நிராகரித்துள்ளது.

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் எரிபொருள் பற்றாக்குறையை தீர்ப்பதற்கும் இந்தப் பணம் தேவைப்படுவதாக சிம்பாப்வே குறிப்பிட்டுள்ளது. ஆனால் அத்தனை பணம் தம்மிடம் இல்லை என்று தென்னாபிரிக்க கருவூல பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து சிம்பாப்வே எரிபொருள் விலையை அதிகரித்தது நாட்டில் பெரும் ஆர்ப்பாட்டத்தை தூண்டியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பல ஆர்ப்பாட்டங்களில் இடம்பெற்ற மோதல்களில் பலரும் தாக்கப்படும் நிலையில் அரசு தரப்பில் இது பற்றி எந்த உறுதியான தகவலும் அளிக்கப்படவில்லை.

சிம்பாப்வேயில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிப்பதோடு விலை அதிகரிப்பை அடுத்து உலகில் அதிக விலைக்கு எண்ணெய் விற்பனை செய்யப்படும் நாடாக சிம்பாப்வே மாறியிருப்பதாக எண்ணெய் விலை தொடர்பான சர்வதேச நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை