100 மில். டொலர் இலஞ்சம் பெற்ற மெக்சிகோ ஜனாதிபதி

போதைக் கடத்தல் மன்னன் கின்பின் ஜோகுவின் ‘எல் செப்போ’ குஸ்மான் இடம் இருந்து மெக்சிகோ முன்னாள் ஜனாதிபதி என்ட்ரிக் பெனா நிடோ 100 மில்லியன் டொலர் லஞ்சம் பெற்றதாக பார்த்தவர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

பல ஆண்டுகளாக குஸ்மானுடன் நெருக்கம் கொண்டிருந்த அலெக்ஸ் சிபுவென்டஸ், நியூயோர்க் நகர நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில், 2016 ஆம் ஆண்டு இந்த இலஞ்ச விவகாரம் குறித்து நிர்வாகத்தை அறிவுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பிகப்பெரிய போதைப்பொருள் விநியோகஸ்தராக இருந்த குஸ்மான், சினாலோ போதை கடத்தல் கும்பலின் பின்னணியில் இருந்தவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

பெனா நிடோ 2012 தொடக்கம் 2018 வரை மெக்சிகோ ஜனாதிபதியாக இருந்தார்.

பெனா நிடோ 250 மில்லியன் டொலர் இலஞ்சம் கேட்டதாகவும் 100 மில்லியன் டொலருடன் உடன்பாட்டுக்கு வந்ததாகவும் சிபுவென்டஸ் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குஸ்மானின் நண்பர் ஒருவர் மூலம் 2012 ஒக்டோபர் மாதம் மெக்சிகோ சிட்டியில் வைத்து இந்த பணம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை