ஐ.நா முழு அங்கத்துவத்திற்கு விண்ணப்பிக்க பலஸ்தீன் முடிவு

ஐக்கிய நாடுகளின் முழு அங்கத்துவத்தை பெற பலஸ்தீன் விண்ணப்பிக்க இருப்பதாக பலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல் மாலிக்கி குறிப்பிட்டுள்ளார்.

“ஐ.நாவில் எமது முழு அங்கத்துவத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என்பது எமக்குத் தெரியும். என்றாலும் அது நாம் விண்ணப்பிப்பதை தடுக்காது” என்று மாலிக்கி குறிப்பிட்டார்.

2012ஆம் ஆண்டு பலஸ்தீனத்திற்கு அங்கத்துவமற்ற கண்காணிப்பு அந்தஸ்த்தை ஐ.நா வழங்கியது. எனினும் முழு அங்கத்துவம் பெறுவதற்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் அங்கீகாரம் தேவை என்பதோடு அதனைத் தொடர்ந்து ஐ.நா பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

ஐ.நாவில் முழு அங்கத்துவம் பெறுவதற்கு 2011 ஆம் ஆண்டிலும் பலஸ்தீன் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் அதற்கு எதிராக வீட்டோவை பயன்படுத்துவதாக அமெரிக்கா எச்சரித்த நிலையில் அந்த விண்ணப்பம் பாதுகாப்பு சபைக்கு வரவில்லை.

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை