டிரம்ப் ஈராக்கிற்கு திடீர் கிறிஸ்மஸ் தின விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் முன் அறிவிக்கப்படாத விஜயமாக ஈராக் சென்று அங்கு நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினரை சந்தித்துள்ளார்.

கிறிஸ்மஸ் தனத்தின் பிந்திய இரவு இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கும் டிரம்ப், தமது சேவை, வெற்றிகள் மற்றும் தியாகத்திற்காக துருப்புகளுக்கு நன்றி தெரிவித்ததாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

ஈராக்கில் இருந்து துருப்புகளை வெளியேற்ற திட்டமில்லை என்று இதன்போது டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த பிராந்தியத்தின் மூலோபாயம் தொடர்பில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மட்டிஸ் இராஜினாமா செய்து சில தினங்களில் டிரம்பின் ஈராக் விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஞ்சியுள்ள ஐ.எஸ். குழுவுக்கு எதிராக ஈராக் அரசின் போராட்டத்திற்கு உதவியாக ஈராக்கில் சுமார் 5,000 அமெரிக்க துருப்புகள் முகாமிட்டுள்ளன.

எனினும் டிரம்ப் மற்றும் ஈராக் பிரதமர் அதெல் அப்துல் மஹ்திக்கு இடையில் திட்டமிடப்பட்ட சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. எவ்வாறு சந்திப்பை நடத்துவது என்று இணக்கப்பாடு ஒன்றுக்கு வராததால் இந்த சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டதாக மஹ்தியின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Fri, 12/28/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை