அதிக ஓட்டக்குவிப்பில் பிரபலமற்ற பாடசாலை வீரர்கள்

நாடு முழுவதும் தற்போது விளையாடப்பட்டு வரும் பாடசாலைகளுக்கிடையிலன கிரிக்கெட் போட்டிகளில் பிரபலமற்ற சிறிய பாடசாலைகளுக்காக விளையாடும் பாடசாலை வீரர்கள் அதிக அளவில் ஓட்டங்களை குவிப்பதை கடந்த ஓரிரு வாரங்களில் காணமுடிகிறது. மொபிடெல்- ஒப்சேர்வர் பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதுகளுக்காக தங்கள் பெயர்களை வாசகர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாடசாலை வீரர்கள் தமது விளையாட்டில் அதிக அக்கறை காட்டுவதாக இதனை எடுத்துக்கொள்ள முடியும்.

சீதாவக்க தேசிய பாடசாலையின் கலன மதுசங்க இந்த கிரிக்கெட் பருவகாலத்தில் மூன்றாவது இரட்டை சதத்தை தமது பெயரில் பதிவு செய்துகொண்டு நட்சத்திர அந்தஸ்து பெறுகிறார். கடந்த வாரம் இவரது பாடசாலை கன்கந்த சென்ட்ரல் பாடசாலைக்கு எதிராக விளையாடிய போட்டியில் கலன 156 பந்துகளை எதிர்கொண்டு 201 ஓட்டங்களை பெற்றால் இதில் 26 பௌண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடங்கின.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் மதுசங்க இந்த பருவகாலத்தில் 8 போட்டிகளில் மட்டும் விளையாடி 900 ஓட்டங்களை பெற்றிருப்பதாகும். இதில் மூன்று இரட்டை சதங்களும் இரண்டு சதங்களும் உள்ளடங்குகின்றன.

கடந்த வார போட்டிகளில் சதங்களை பெற்ற ஏனைய வீரர்களில் மாத்தறை ராகுல கல்லூரியின் பாக்ய எதிரிவீர (121 ஓட்டங்கள்) கண்டி, கல்லூரியின் எச். டி. விக்ரமசிங்க (118) ஆனந்த கல்லூரியின் கமேஷ் நிர்மல், பண்டாவளை சென்தோமஸ் கல்லூரியின் தெவின் அமரசிங்க (148) மற்றும் இலங்கை இளைஞர் அணி வீரர் நிதமான் மதுசங்க (மொரட்டு வித்தியாலய) ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

வடக்கில் இடம்பெற்ற பாடசாலை கிரிக்கெட் போட்டிகளில் யாழ் மத்திய கல்லூரி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 179 ஓட்டங்கள் என்ற பாரிய வித்தியாசத்தில் கொக்குவில் இந்து கல்லூரியை தோற்கடித்து. இப்போட்டியில் ஆர். ரஜெட் லின்டன் 73 ஓட்டங்களையும் ஏ. ஜெயஹர்ஷன் 64 ஓட்டங்களையும் யாழ். இந்துக் கல்லூரிக்கு பெற்றுக்கொடுத்தனர்.

இதேவேளை கடந்த வாரம் அரைச்சதம் பெற்ற பல வீரர்களில் அம்பலாங்கொட தேவானந்த கல்லூரியின் சொஹான் டி லிவேரா 94 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கட்டுகஸ்தோட்டை சென் அந்தனீஸ் கல்லூரியின் தமாஷன் அபேகூன் 94 ஓட்டங்களை பெற்றார். கொழும்பு அசோக கல்லூரிக்கு எதிரான போட்டியில் தமாஷனவுடன் தீக்ஷா குணசிங்க 85 ஓட்டங்களையும் கல்ஹார சேனாரட்ன 50 ஓட்டங்களையும் பெற்றனர். வடமேல் மாகாண ரோயல் கல்லூரியின் சஹன் பண்டார 79* ஓட்டங்களையும் கட்டுகஸ்தோட்டை ராகுல கல்லூரியின் மதுஷன் பரணவிதான ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களையும் பெற்றனர். காலி மஹிந்த கல்லூரியின் அஷேன் கண்டம்பி 56 ஓட்டங்களையும், வத்தளை சென் அந்தனீஸ் கல்லூரியின் ஜோயென் பின்டோ 70 ஓட்டங்களையும்,

ஸ்ரீதர்மசோக கல்லூரியின் ஹரித ஜெஷான் 51 ஓட்டங்களையும், பி.ம. எஸ். குலரட்ன மகா வித்தியாலத்தின் மனுஷ தீக்ஷன 66 ஓட்டங்களையும் வகில தெஹான் 58 ஓட்டங்களையும் பெற்றனர். பிலியந்தல சென்ட்ரல் கல்லூரியின் ஜனித் திஷ்ஷான் 57 ஓட்டங்களையும் கம்பஹா பண்டாரநாயக்க சென்ட்ரல் கல்லூரியின் சிதிஜ நவோட் 64 ஓட்டங்களையும் பெற்றனர். வத்தளை சென் ஜோசப் கல்லூரியின் செரினத் சில்வா ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை பெற்றார்.

கடந்த வரை போட்டிகளில் பந்து வீச்சைப் பொறுத்தவரை வத்தளை சென் ஜோசப் கல்லூரியின் பசிந்து முனசிங்க 66 ஓட்டங்களுக்கு எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதே சிறப்பானதாக இருந்தது.

அத்துடன் வடமேல் மாகாண ரோயல் கல்லூரிக்காக பி. அதிகாரநாயக்க 24 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளையும் மாதம்பே சென்ட்ரல் கல்லூரிக்காக மல்ஷா தடுபத்தி 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் எம். அபிலாஷ் 33 ஓட்டஙகளுக்கு 5 விக்கெட்டுகளையும் பிலியந்தல சென்ட்ரல் கல்லூரியின் ஹெஹான் மதுசங்க 11 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களையும் குவனிய ஸ்ரீ தர்மமாலோக கல்லூரியின் லக்கான் விஜேசூரிய 57 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளையும் தர்மாசோக கல்லூரியின் அகில மெண்டிஸ் 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

திஸ்ஸ சென்ட்ரல் கல்லூரியின் ஹெஷான் உவிந்த 60 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுகளையும், ஸ்ரீதவானந்த கல்லூரியின் ஹெஷான் மில்க்ஷா 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கொக்குவில் இந்துக் கல்லூரியின் தினேஷ் குமார் 66 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் மினுவங்கொட நாலந்த கல்லூரியின் கவிந்து மதுரங்க 19 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளையும் கொழும்பு கேரி கல்லூரியின் விரங்க யெஷான் 23 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளையும் கண்டி ஸ்ரீ சமங்கள கல்லூரியின் சுபின் கேதரகொட 26 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களையும் கைப்பற்றி தத்தமது பாடசாலைகளுக்கு வெற்றியை கொடுத்தனர்.

Sat, 12/29/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை