இலங்கை அணிக்கெதிரான நியூசிலாந்து ஒருநாள் அணி

சுற்றுலா மேற்கொண்டு நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 2டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு ரி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி இலங்கை நேரப்படி காலை 6.30 மணிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி 5ஆம் திகதி காலை 6.30 மணிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி 8ஆம் திகதி அதிகாலை 3.30 மணிக்கும் இடம்பெறவுள்ளதுடன் ஒரே ஒரு ரி 20 11ஆம் திகதி காலை 11.30 மணிக்கும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து ஒருநாள் அணி

கேன் வில்லியம்சன் (தலைவர்)

ரோஸ் டெய்லர்

ட்ரெண்ட் போல்ட்

டெளக் ப்ரேஸ்வெல்

லோகி பேர்குசன்

மார்ட்டின் கப்டில்

மெட் ஹென்றி

கொலின் மொன்றோ

ஜேம்ஸ் நீசாம்

ஹென்றி நிக்கோல்ஸ்

டிம் செய்பர்ட்

இஷ் சோதி

டிம் சவ்தி

Sat, 12/29/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை