பாடசாலை பணத்தில் சூதாட்டம்: இரு கன்னியாஸ்திரிகள் ஒப்புதல்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாடசாலை ஒன்றை நிர்வகித்து வந்த கன்னியாஸ்திரிகள் இருவர் 500,000 டொலர் வரை முறைகேடாய்ப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இருவரும் பல ஆண்டுகளாகப் பாடசாலை பணத்தைக் கொண்டு உல்லாசப் பயணம் சென்று சூதாட்டத்திலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

உற்ற தோழிகளாகக் கருதப்படும் கன்னியாஸ்திரிகள் மேரி மார்கரெட் கிரூப்பர், லானா சாங் இருவரும் மாணவர்களின் பாடசாலை கட்டணம், பாடசாலைக்கு வழங்கப்பட்ட நன்கொடை ஆகியவற்றை முறைகேடாகப் பயன்படுத்திவந்தனர். சுமார் பத்தாண்டுகளாக அவர்கள் பாடசாலை பணத்தைக் கையாடல் செய்து வந்தது, அண்மையில் செய்யப்பட்ட கணக்குத் தணிக்கையில் தெரியவந்தது.

இருவரும் கடந்த 20 ஆண்டுகளாகப் பாடசாலையில் பணியாற்றி இவ்வாண்டு வேலையிலிருந்து ஓய்வுபெற்றனர்.

இருவரும் பாடசாலை பணத்தை திருப்பிக் கொடுக்க முன்வந்துள்ளதாக தேவாலயம் தெரிவித்தது. நீண்ட காலமாகப் பாடசாலையில் நன்னெறிகளை போதித்து வந்த இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று தேவாலய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Wed, 12/12/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை