இன்ஸ்ட்டாகிராம் செயலியில் ‘வொயிஸ் மெசேஜ்’ வசதி

பிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வொய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர உதவும் சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராம் பிரபலமான ஒன்றாகும். இதுவரை வட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் மட்டுமே செய்திகளை ஓடியோவாக பரிமாறிக் கொள்ளும் வசதி இருந்து வந்தது.

இந்நிலையில் இன்ஸ்ட்டாகிராமிலும் வொய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ‘பாஸ்ட் கம்பெனி’ இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இன்ஸ்ட்டாகிராம் செயலியில் தற்போது புதிதாக ஒரு மைக்ரோபோன் பொத்தான் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பொத்தானை அழுத்திப் பிடித்துக் கொண்டிருப்பதன் மூலமாக நீங்கள் விரும்பும் தகவலை ஓடியோவாக பதிவு செய்யலாம்.

வட்ஸ் அப்பை பொறுத்த வரை ஓடியோவை பதிவு செய்வதற்கு முன்னர் யாருக்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஆனால் இன்ஸ்ட்டாகிராமின் புதிய வசதியில் முதலில் ஓடியோவை பதிவு செய்த பின்பு, தனிநபருக்கோ அல்லது குழுவையோ தேர்வு செய்து அனுப்பும் வசதி உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 12/12/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை