பிலிப்பைன்ஸிடம் இருந்து திருடிய மணியை கொடுத்தது அமெரிக்கா

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் யுத்த வெற்றிச் சின்னமாக அமெரிக்க படையால் எடுத்துச் செல்லப்பட்ட தேவாலய மணிகள் மீண்டும் பிலிப்பைன்ஸுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அமெரிக்க காலனித்துவத்திற்கு எதிராக போராட்டத்தின் சின்னமாக இருக்கும் இந்த மணிகளை திரும்பத் தரும்படி பிலிப்பைன்ஸ் பல தசாப்த காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையிலேயே அவை திரும்ப கொடுக்கப்பட்டுள்ளன.

இராணுவ சரக்கு விமானம் ஒன்றில் மனிலா விமானத் தளத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கும் ‘பலங்கிகா மணிகள்” வரும் சனிக்கிழமை மத்திய தீவான சமரில் உள்ள தேவாலயத்திற்கு கொடுக்கப்படவுள்ளது. 48 அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் 1901 ஆம் ஆண்டு இங்கு அமெரிக்க துருப்புகளால் நூற்றுக்கணக்கான பிலிப்பைன்ஸ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1899–1902 அமெரிக்க–பிலிப்பைன்ஸ் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பலங்கிகா மோதல் அமெரிக்க காலனித்துவத்தின் இருண்ட பக்கமாக கருதப்படுகிறது.

Wed, 12/12/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை