மஹிந்த இன்று இராஜினாமா ரணில் நாளை பதவியேற்பு

  • புதிய அமைச்சரவையும் பதவியேற்கும்
  • சு.க − பொது பெரமுன  அரசியல் கூட்டணி

நாட்டில் ஸ்திர நிலையை ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்வாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றிய பின்னர் அவர் தனது இராஜினாமாவை கையளிக்கவுள்ளதாக அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை (16) புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வு நாளை (16) காலை 10.00 மணிக்கு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையும் நாளை முதல் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, புதிய அமைச்சரவை நியமிப்பது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களுக்கிடையே பலசுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன.

ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கியுள்ள எழுத்துமூல உத்தரவாதத்தின்படி, ரவி கருணாநாயக்கா நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவித அரசியல் கூட்டும் ஏற்படுத்திக்ெகாள்வதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும், புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் அவர்களது விருப்பத்திற்கேற்ப தீர்மானிப்பார்களேயானால், அதற்கு எதிராக எந்தவிதமான நடவடிக்ைகயும் எடுக்கப்போவதில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து அரசியல் ரீதியில் செயற்படவிருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ, தனது பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வாரென பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் நேற்று மாலை தெரிவித்தார்.

நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையே சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருக்கும் வரை வேறொரு பிரதமரை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது போகும் என்பதால் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு நலன் கருதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷ, தனது பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வாரென பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் நேற்று மாலை தெரிவித்தார். நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையே சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருக்கும் வரை வேறொரு பிரதமரை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது போகும் என்பதால் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு நலன் கருதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

Sat, 12/15/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை