நிறைவேற்று அதிகாரத்தின் தவறை நீதித்துறை திருத்தியமைப்பு

நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக நிறைவேற்று அதிகாரத்தால் எடுக்கப்பட்ட தவறான முடிவை நீதித்துறை திருத்தியி ருப்பதாக ஜே.வி.பி எம்.பி விஜித ஹேரத் தெரிவித்தார்.பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி தலை மையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த அவர்:

உச்ச நீதிமன்றத்தால் கடந்த வியாழக்கிழமை

வழங்கப்பட்ட தீர்ப்பு நீதித்துறைக்கும் மக்களுக்கும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கும் கிடைத்த வெற்றி. அரசியலமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருந்த செயற்பாடுகளை தோற்கடித்தே தீருவோம் என ஜே.வி.பி ஆரம்பம் முதலே தெரிவித்திருந்தது.

நாம் இதற்காக எமது போராட்டத்தை பாராளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் வீதிகளிலும் முன்னெடுத்திருந்தோம்.எமது போராட்டத்துக்கான வெற்றி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.அத்துடன் மக்களின் உண்மையான வெற்றியை நிலைநாட்டும் வகையிலும் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டும் வகையிலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க தமது கட்சி நடவடிக்கை எடுத்திருப்பதா கவும் அவர் கூறினார்.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய அரசாங்கத்தி லிருந்து விலகியிருக்கும் நிலையில் புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை 30 இற்கு மேற்படாத உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும் என்றும் ஜே.வி.பி எம்.பி வலியுறுத்தினார்.

அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் பதவி மற்றும் எதிர்கட்சியின் பிரதம கொறடா பதவி யை ஐ.ம.சு.முவுக்கு வழங்குவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றும் அவர் கூறினார்.

Sat, 12/15/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை