அமெரிக்க எல்லைத் தடுப்பில் மற்றொரு சிறுவர் உயிரிழப்பு

அமெரிக்க எல்லைப் படையால் தடுத்து வைக்கப்பட்ட குவான்தமாலாவைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

கிறிஸ்மஸ் தினத்திற்கு ஒருநாள் முன்னர், அந்தச் சிறுவனும் அவனுடைய தந்தையும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க சுங்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவு கூறியது.

அப்போது அந்தச் சிறுவன் நோய்வாய்ப்பட்டிருந்ததை அதிகாரி ஒருவர் கண்டறிந்தார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சிறுவனுக்குச் சாதாரண சளிக்காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

அதன் பின்னர் அந்தச் சிறுவன் மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டான். ஆனால் அவனுடைய உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவன் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனது உயிர் பிரிந்தது.

அந்தச் சிறுவனின் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அமெரிக்க எல்லைப் படையால் தடுத்து வைக்கப்பட்ட சிறுவர் இறப்பது இது இரண்டாவது சம்பவமாகும்.

இம்மாதத்தின் முற்பாதியில் ஜெக்கலின் கால் எனும் 7 வயதுச் சிறுமி அமெரிக்க எல்லைப் படையால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் இறந்தார். மத்திய அமெரிக்காவில் இருந்து ஆயிரக்கணக்கான குடியேறிகள் அமெரிக்க எல்லையை நோக்கி பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thu, 12/27/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை