டயலொக் றக்பி லீக்கில் தோல்வி அடையாத அணியாக கண்டி அணி முதலிடம்

முதற்தரகழகங்களுக் கிடையிலான டயலொக் றக்பிலீக் தொடரின் முதல் சுற்றின் இறுதிவாரத்துக்கான போட்டிகள் கடந்த வார இறுதியில் நடைபெற்றன.

இதில் முதல் சுற்றுக்கான அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்றநடப்புச் சம்பியன் கண்டி கழகம் தோல்வி அடையாத அணியாக புள்ளிகள் பட்டியலில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

கண்டி மற்றும் கடற்படை கழகங்களுக்கிடையிலான போட்டி வெலிசறை மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது.

இப்போட்டியில் இறுதிக்கட்டம் வரைபோராடிஅபாரஆட்டத்தைவெளிப்படுத்தியிருந்தகண்டிகழகம் அணி 22க்கு 20 என்றபுள்ளிகள் அடிப்படையில் கடற்படை கழகத்தை வீழ்த்தி இம்முறைபோட்டித் தொடரில் தொடர்ச்சியாக 7ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது.

போட்டியின் இடைவேளை வரை கண்டிகழகம் 14க்கு 8 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலைபெற்றது. இந்தநிலையாயனதுகண்டிகழகம் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் மேலதிகமாகப் புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளும் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடைவேளையின் பின்னர் கடற்படைகழகம்,மிகத் திறமையாக விளையாடி கண்டி கழகத்தை கட்டுப்படுத்தி புள்ளிகளைப் பெற்றுசவால் அளித்தது. இப்பகுதியில் கடற்படைகழகம் 12 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள,கண்டி கழகம் 8 புள்ளிகளையேபெறமுடிந்தது.

ஹவ்லொக்ஸ் கழகம் எதிர் விமானப்படை கழகம்

இரத்மலானை விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இந்தப் போட்டியில் ஹவ்லொக்ஸ் அணி, 31-–25 என்றபுள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

இப்போட்டியின் இடைவேளையின்போது 22 – 21 என்றபுள்ளிகள் அடிப்படையில் ஹவ்லொக்ஸ் கழகம் ஓரு புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலைபெற்றது.

ஆனால் இடைவெளியின் பின்னர் விமானப்படை கழகம் சற்றுகடுமையாக விளையாடி ஹவ்லொக்ஸ் கழகத்தைக் கட்டுப்படுத்திய போதிலும்,ஹவ்லொக்ஸ் கழகத்தின் ஆதிக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது.

எனினும் விமானப்படை அணிக்கு சவாலாக விளங்கிய ஹவ்லொக்ஸ் அணி, இரண்டாவது பாதியில் 17 புள்ளிகளை மேலதிகமாப் பெற்றபோதிலும்,விமானப்படைஅணி 13 புள்ளிகளைபெற்று, 31-25 என்றபுள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதன்படி,ஹவ்லொக்ஸ் கழகம் இதுவரைவிளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மாத்திரம் தோல்வியைத் தழுவிமுதல் சுற்றுஆட்டங்கள் நிறைவில் புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

CR & FC கழகம் எதிர் இராணுவகழகம்

CR & FC கழகத்துக்கும், இராணுவ கழகத்துக்கும் இடையில் இரத்மலானையில் நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதல் இரு அணி வீரர்களும் அபாரஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

போட்டியிக் முதல் பாதியில் இராணுவ அணி 14க்கு 12 என்றபுள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றது. தொடர்ந்துநடைபெற்ற இரண்டாவது பாதியிலும் இராணுவ அணிக்கு பலத்த போட்டியைக் கொடுத்த எதிரணி வீரர்கள் மேலும் 12 புள்ளிகளைப் பெற்று போட்டியைசமப்படுத்தினர்.

இதன்படி, 24க்கு 24 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றிபோட்டிமுடிவடைந்தது.

இதன்படி, இவ்வருட டயலொக் றக்பி லீக் போட்டிகளில் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த முதலாவது போட்டி இதுவாகும்.

அத்துடன், இம்முறைபோட்டிகளில் முதல் சுற்றில் முடிவில் இதுவரை 4 போட்டிகளில் மாத்திரம் வெற்றிகொண்ட CR & FC கழகம் 26 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தைதக்கவைத்துக் கொண்டுள்ளது.

CH& FC கழகம் எதிர் பொலிஸ் கழகம்

கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமைநடைபெற்றமற்றுமொருவிறுவிறுப்பானபோட்டியில் CH& FCகழகம் 29க்கு 24 புள்ளிகள் கணக்கில் பொலிஸ் கழகத்தை வீழ்த்தி இம்முறைபோட்டிகளில் 3ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது.

முதல் பாதியில் அபாரம் காட்டிய CH& FC கழகம், 24-–10 என்றபுள்ளிகளுடன் முன்னிலையைப் பெற்றது. இரண்டாவதுபாதியில் பொலிஸ் கழகவீரர்கள் சிறப்பாகவிளையாடிய போதும், அந்த அணியால் மொத்தமாக 14 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்தது. இதன்படி 29-–24 என்றபுள்ளிகள் கணக்கில் CH& FC கழகம் அணிவெற்றிபெற்றது.

(பீ.எப் மொஹமட்) 

 

Thu, 12/27/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை