இலாபமீட்டும் நிறுவனமாக விரைவில் மாற்றப்படும்

இலாபமீட்டும் நிறுவனமாக மின்சார சபை மாறும்போது பாவனையாளர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவோமென மின்சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க வாக்குறுதியளித்துள்ளார்.

மின்சார சபையின் தொழிற்சங்க ஊழியர்களுடனான சந்திப்பின்போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் இவ்வாக்குறுதியை வழங்கினார். இச்சந்திப்பில் 58 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.

பல நிறுவனங்கள் நிதி நிர்வாகம் ஒழுங்கின்றி செயற்பட்டு வருவதாக இதன்போது தொழிற்சங்கங்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டின. மின்சார விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் இதன்போது தொழிற்சங்கங்கள் அமைச்சரிடம் தெரிவித்தன. மேலும் மின்சாரசபை ஊழியர்களுக்கு கடந்த காலங்களில் தனிப்பட்ட முறையில் தண்டனைகள் வழங்கப்பட்டதாகவும் இதற்கென தனியான சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டிருந்தமை தொடர்பிலும் தொழிற்சங்கங்கள் அமைச்சரிடம் விசனம் தெரிவித்தன. இதற்கு அமைச்சர், மின்சார சபையில் நிலவும் நிதி மற்றும் ஊழியர்களின் பிரச்சினை தொடர்பில் விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாகவும் தொழிற்சங்கத்தினரிடம் தெரிவித்தார்.

மின்சார சபையை விரைவில் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவோம் என்றும் அதற்கமைய மின் கட்டணத்தை குறைத்து நுகர்வோருக்கு நிவாரணம் அளிப்போமென்றும் அமைச்சர் இதன்போது கூறினார்.

Sat, 12/29/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை