முதலிடத்தை பிடித்தார் தில்ருவன் பெரேரா

2018ஆம் ஆண்டு 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதலாவது வீரராக இலங்கை அணியின் தில்ருவன் பெரேரா பதிவானதுடன் 2018ஆம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தையும் பெற்றார்.

நேற்றுமுன்தினம் ஆரம்பமான நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஜீட் ராவலின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமே தில்ருவன் பெரேரா இந்த பெருமையை பெற்றார். இந்த தரவரிசையில் 49 விக்கெட்டுகளைப் பெற்ற தென்னாபிரிக்க அணியின் கஹிசோ ரபடா இரண்டாம் இடத்திலும் அவுஸ்திரேலியாவின் நதன் லயன் 48 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

தென்னாபிரிக்க அணி பாகிஸ்தான் அணியுடனும் அவுஸ்திரேலிய அணி இந்திய அணியுடனும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதன் காரணமாக இந்த தரவரிசை 2018ஆம் ஆண்டு முடிவடைய முன்னர் மாறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 12/28/2018 - 18:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை