துறைமுகங்கள்,கப்பற்றுறை, தெற்கு அபிவிருத்தி அமைச்சரும் பிரதமர் அலுவலக பிரதம அதிகாரியுமான சாகல ரத்னாயக்க, நேற்று (28) கொழும்பு துறைமுகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இவ் விஜயத்தின் போது துறைமுக அதிகார சபை தலைவரின் அலுவலகம், ஹாபர் மாஸ்டர் அலுவலகம் ( Harbour Master Office) , Pilot Station, ஜயபாலு முனையத்தின் நிர்வாக கட்டிடம் (JCT Administration Building) உள்ளடங்கலாக துறைமுகத்திலுள்ள பல இடங்களை பார்வையிட்டார்.
அமைச்சரின் இவ் விஜயத்தின்போது, அமைச்சின் செயலாளர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க , இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ அத்தியட்சகர் அத்துல ஹேவாவித்தாரன, இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு அத்தியட்சகர் ஜயந்த பெரேரா உட்பட நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்துக்கொண்டனர்.
from tkn