38ஆவது தேசிய ஸ்கொஷ் போட்டி

இலங்கை இராணுவம் யுத்தத்தின்போது நாட்டை மீட்டெடுத்தது. அதன் பின்னர் தற்கால இராணுவத் தளபதியவர்களின் சுகமான இராணுவம் சுகமான நாடு மற்றும் நாட்டினரிடையேயான நல்லிணக்கம் எனும் தொணிப் பொருளிற்கு அமைவாக இராணுவ வீர, வீராங்கனைகள் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போட்டியிட்டு வெற்றியீட்டி பிரஜைகள் இடையே நல்லிணக்கததை உருவாக்கி இலங்கை நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தொன்றுதொட்டு இராணுவத்தின் விளையாட்டாக காணப்பட்ட ஸ்கொஷ் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு வீரர்கள் இடையே நிகரான பயிற்சிகள் அடிப்படை வசதிகள் போன்றவற்றை வழங்கி அவர்களை சர்வதேச ரீதியில் விளையாட்டு வீரர்களாக உருவாக்கும் நோக்கில் இலங்கையில் இவ்விளையாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இராணுவத் தளபதியவர்களின் முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டதுடன் அதற்காக அடிப்படை வசதிகள் நடைபெற்றவண்ணம் உள்ளன.

அந்த வகையில் 2017 ஆம் ஆண்டில் 37 ஆவது தேசிய ஸ்கொஷ் சங்கத்தின் வெற்றியானது இராணுவத்தினரின் பங்களிப்போடு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இலங்கை தேசிய ஸ்கொஷ் சங்கத்தின் வேண்டுகோளிற்கமைய 2018 ஆம் ஆண்டின் 38 ஆவது தேசிய ஸ்கொஷ் கிண்ண போட்டிகள் டிசெம்பர் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை பனாகொடை இராணுவ முகாமில் உடற்பயிற்சி கல்லூரியில் காணப்படும் ஸ்கொஷ் விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்படுவதற்கான அனைத்து ஒழுங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு நவீன மயப்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானமானது பயிற்சிகளைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நவீனமயப்படுத்தப்பட்ட ஸ்கொஷ் விளையாட்டரங்கானது அனைத்து வசதிகளுடனும் கூடிய சர்வதேச மட்டத்தில் காணப்படும் ஸ்கொஷ் விளையாட்டு அரங்கிற்கு இணையாக காணப்படுகின்றது. அந்த வகையில் தற்போது 2018 ஆம் ஆண்டு இராணுவ படைத் தலைமையகங்களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகளில் இடம்பெற்ற வண்ணம் காணப்படுகின்றது.

அந்தவகையில 38 ஆவது சர்வதேச விளையாட்டு கிண்ண போட்டிகள் மற்றும் வெளிக்களப் போட்டிகள் போன்றன டிசம்பர் 30 ஆம் திகதி 16.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்றய தின நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் கலந்துகொள்ளவுள்ளார். மேலும் இந்நிகழ்விற்கான நேரடி ஒலிபரப்பும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இராணுவத்தில் காணப்படும் ஒருங்கிணைப்பு மற்றும் அடிப்படை வசதிகளைக்கொண்டு இராணுவ படையணிகளில் காணப்படும் ஸ்கொஷ் விளையாட்டு அரங்கானது இராணுவ விளையாட்டாளர்கள், பயிலுனர்கள் சார்பாக பயிற்றப்பட்டு பாடசாலை மற்றும் தேசிய மட்டங்களில் வீர, வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கில் அதற்கான வசதிகளை வழங்குதல் என்பன இராணுவத் தளபதியவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட அம்சமாக 2019 ஆம் ஆண்டு இராணுவத்தின் ஸ்கொஷ் விளையாட்டு போட்டியானது அனைத்து வயதினரையும் பாடசாலை மட்ட மற்றும் உயர் மட்ட விளையாட்டு வீரர்கள் போன்றவர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பை வழங்கும் வண்ணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Sat, 12/22/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை