பாடசாலை மட்ட உதைபந்தாட்டம்: நிந்தவூர் மதீனா அணி சம்பியன்

நிந்தவூர் குறூப் நிருபர்

பாடசாலை உதைபந்தாட்ட சம்மேளத்தினால் பதிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் வருடாந்தம் நடாத்தப்படும் உதைபந்தாட்ட போட்டியில் நிந்தவூர் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த நிந்தவூர் அல்-மதீனா பாடசாலை வீரர்கள் தேசிய ரீதியில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சம்பியன்களாக சாதனை படைத்துள்ளனர்.

இந்தப் போட்டியானது கடந்த (17,18,19) ம் திகதிகளில் வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் பாடசாலை உதைபந்தாட்ட சம்மேளத்தின் எஸ்.டி. திசாநாயக்க தலைமையில் அங்குராப்பணம் செய்யப்பட்டது. இதில் 24 மாவட்டங்களிலிருந்தும் 24 பாடசாலைகள் பங்குபற்றியிருந்தது.

இதில் கடந்த (18)ம் திகதி நடைபெற்று முடிந்த இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான குருணாகல் குளியாப்பிட்டி அல்/ கமர் பாடசாலையை எதிர்த்து இடைவிடா பந்துப்பரிமாற்றம் மூலம் எதிர் அணிக்கு சந்தர்ப்பங்களை வழங்காது போட்டியானது சமநிலையில் முடிவுற்றது. இதன் பின்னர் பனால்டி உதை மூலம் 6 : 5 கோல்கள் மூலம் நிந்தவூர் வீரர்கள் வெற்றி பெற்று 16 வயதுக்குட்பட்ட 2018 ம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளன சம்பியன்களாக தெரிவாகினர்.

இதேவேளை குழு நிலை போட்டியில் 2 ம் இடம் பெற்று சுற்று 16 க்கு தெரிவாகியிருந்தது. அதில் யாழ்ப்பாணம் பீட்டர்ஸ் கல்லூரியை எதிர்த்து ஆடிய நிந்தவூர் மதீனா அணி 1(4):1(1) வெற்றியீற்றி காலிறுதிக்கு தெரிவாகியது. இதில் கொழும்பு மெதஸ்டிக் கல்லூரியை எதிர்த்து ஆடிய மதீனா அணி 1(3) : 1(5) எனும் கோல் அடிப்படையில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தது.

அரையிறுதியில் பலமிக்க கொழும்பு பீட்டர்ஸ் கல்லூரியை சந்தித்த மதீனா அணி

ஆரம்பம் முதலே அதிரடியை ஆரம்பித்து போட்டியை சமனிலைப்படுத்தி பெனால்ட்டி மூலம் 6 : 4 என்ற பெனால்டி கோல்கள் மூலம் வரலாற்று வெற்றியினை பதிவு செய்து இற்றுதிப்போட்டிக்கு தெரிவாகிருந்ததுடன் இதில் சிறந்த வீரராக அணியின் எஸ்.எம். ஜப்பார் தெரிவாகியுள்ளதோடு, மலேசியாவுக்கான சுற்றுப் பயணத்திற்கும் இரண்டு வீரர்கள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாணவர்களின் வெற்றிக்கு பக்கதுணையாய் இருந்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் ஜாபிர் கபூர் மற்றும் களப்பயிற்சி வழங்கிய சோண்டர்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்தவரும், உதைபந்தாட்ட நடுவருமான ஏ.எம். இன்ஷாப் ஆகியோர்களுக்கும் பாடசாலை சமூகம் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Sat, 12/22/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை