சென்ரேலியன் பிரீமியர் லீக் ; சம்பியனாக 2014 ஈகில்ஸ் அணி

சம்மாந்துறை தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் ஒவ்வொரு வருட ரீதியான அணிகளுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சென்ரேலியன் பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சம்பியனாக 2014 ஈகில்ஸ் அணி மகுடம் சூடியுள்ளது. சம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப்போட்டியில் செவன் டென் சென்ரேலியன் அணியை எதிர்த்து 2014 ஈகில்ஸ் அணி போட்டியிட்டது.

சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற அணிக்கு 5 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய செவன் டென் சென்ரேலியன் அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களிலும் 4 விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

செவன் டென் சென்ரேலியன் அணியின் துடுப்பாட்டத்தில் ரிபாட் 28 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 64 என்ற கடின வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய 2014 ஈகில்ஸ் அணி 4.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அபாம் ஆட்டமிழக்காது 32 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அபாம் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, சுற்றுத் தொடரின் ஆட்டநாயகனாக செவன் டென் சென்ரேலியன் அணியின் சாக்கிர் தெரிவு செய்யப்பட்டார். செவன் டென் சென்ரேலியன் அணியானது 27,28 வயது கொண்ட வீரர்களை உள்ளடக்கிய அணியாகும். 2014 ஈகில்ஸ் அணியானது 20,21 வயதுடைய வீரர்களை கொண்ட அணியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் எந்த விதமான ஆரவாரங்களும் இல்லாமல் அமைதியாக சாதித்த பெருமையை இளம் வீரர்களை கொண்ட 2014 ஈகில்ஸ் அணி கொண்டுள்ளது.

Sat, 12/29/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை