நர மழகயல ஒடசசன தரம நலயல தடதல தவரம

டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்று அட்லாண்டிக் கடலில் காணாமல்போயுள்ள நீர்மூழ்கிக் கப்பலில் ஒட்சிசன் தீர்ந்துவரும் நிலையில் அதனை தேடும் பணிகள் நேற்று (22) தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) காலை 12,500 அடி ஆழத்தில் வைத்தே இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஐந்து பேருடன் காணாமல்போனது. அதில் 96 மணி நேரத்திற்கே அவசர காற்றோட்்டம் இருக்கும் நிலையில் கவலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அட்லாண்டிக் கடலின் அடியில் கேட்ட சத்தம் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வரவில்லை என்ற புதிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அந்தக் கப்பலில் இருந்து சத்தம் வருவதாக முன்னர் செய்திகள் வந்தன.

ஆனால் அமெரிக்கக் கடற்படை அணு நீர் மூழ்கிப் பிரிவின் முன்னாள் தளபதி டேவிட் மார்க்கெட், சத்தம் அந்தக் கப்பலில் இருந்துதான் வருகிறது என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்றார்.

அமெரிக்க கடலோர காவல்படை, கனடா இராணுவ விமானங்கள், பிரான்ஸ் கப்பல்கள் மற்றும் தொலைநோக்கி ரோபோக்கள் ஆகியவை நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்க போராடி வருகின்றன.

கடைசியாக சமிக்ஞை துண்டிக்கப்பட்ட இடத்தில் இருந்து மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், நீர்மூழ்கிக் கப்பல் எந்த திசையில் சென்றது என்பதை கண்டறிவது சவாலாக இருப்பதாக மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கணக்டிக்கெட் மாநிலத்தில் இருந்து 12,200 அடி தூரம் கடல் பரப்பில் தேடுதல் பணி நடைபெற்று முடிந்த நிலையில் நீர்மூழ்கிக் கப்பலை கண்டறிய முடியவில்லை என அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“தேடுதல் பணி எவ்வளவு விரைவாக நடைபெற வேண்டுமோ அவ்வளவு விரைவாக நடைபெற்று வருகிறது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று கனடா மற்றும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. தேடுதல் பணியில் கூடுதல் படகுகள், நீர் மூழ்கி இயந்திரங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணியின் தலைவர் ஜேமி பிரட்ரிக் கூறும்போது, “நீர்மூழ்கிக் கப்பலில் எவ்வளவு ஒட்சிசன் எஞ்சியிருக்கிறது என்பதைக் கணிப்பது கடினமான ஒன்று, ஒவ்வொருவருக்கும் ஓட்சிசனின் நுகர்வு விகிதம் எவ்வளவு என்று நமக்குத் தெரியாது” என்றார்.

Fri, 06/23/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை