பெர்லுஸ்கோனி காலமானார்

பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி அதில் இருந்து மீண்டு வந்த இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86ஆவது வயதில் காலமானார். மிலானில் உள்ள சான் ரபாயேல் மருத்துவமனையில் வைத்து அவர் மரணித்ததாக இத்தாலி ஊடகங்கள் நேற்று (12) செய்தி வெளியிட்டன. பெர்லுஸ்கோனி கடந்த ஏப்ரலில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்றிருந்தார்.

பெரும் செல்வந்தரான அவர் 1994 ஆம் ஆண்டு பதிவிக்கு வந்து 2011 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார். அவரது இத்தாலியா கட்சி ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

விலை மாதுகளுடன் பாலியல் களியாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மற்றும் பல ஊழல் மற்றும் வரி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் பெர்லுஸ்கோனி கடந்த காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

Tue, 06/13/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை