ரஷய இரணவததல சரம நபள இளஞரகள

நேபாளாத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் படித்து விட்டு வேலை தேடுவதில் சிரமங்களை சந்தித்து வந்த நிலையில் தான் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் இப் போரில் இறந்தனர்.

அதன் விளைவாக ரஷ்ய இராணுவத்தில் சேர படைவீரர்கள் தேவைப்பட்டனர்.

இந்நிலையில் வெளிநாட்டவரும் ரஷ்ய இராணுவத்தில் வேரும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். ரஷ்ய பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதிக ஊதியம் ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்குவது என ரஷ்ய இராணுவத்தில் சேர விரும்பும் வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள்ளது.

Fri, 06/30/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை