கஙகவல சறவரகள உடபட 46 பர கல

வடகிழக்கு கொங்கோவில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் முகாம் ஒன்றின் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல் ஒன்றில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதி அளவானவர்கள் சிறுவர்களாவர்.

இடுரி மாகாணத்தில் இனரீதியில் கொடிய கொலைகளில் ஈடுபட்டுவரும் ஆயுதக் குழு ஒன்றே கடந்த ஞாயிறு இரவு தொடக்கம் திங்கள் வரையான காலப்பகுதியில் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் ஒரு தசாப்தம் நீடித்த அமைதிக்குப் பின்னர் ஹெமா மற்றும் லென்டு சமூகங்களுக்கு இடையிலான மோதல் 2017இல் மீண்டும் வெடித்துள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதோடு 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Wed, 06/14/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை