பர நடட கபப கடஙகல 3000 ஆணட மமம கணடபடபப

பெரு தலைநகர் லிமாவில் உள்ள குப்பை கொட்டும் தளம் ஒன்றில் தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் சுமார் 3000 ஆண்டுகள் பழைமையாக மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வாராய்ச்சிக்கு உதவி புரிந்த மர்கோஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆரம்பத்தில் அந்த மம்மியின் தலைமுடி மற்றும் மண்டையோட்டை கண்டுள்ளனர்.

அந்தத் தளத்தில் இருந்து சுமார் எட்டு தொன் குப்பைகளை அகற்றி வரலாற்று எச்சங்களை தேடும் ஆராய்ச்சியை கவனமாக ஆரம்பித்ததாக தொல்பொருள் ஆய்வாளரான மிகுவேல் அகுய்லர் தெரிவித்தார்.

இந்த மம்மி மஞ்சாய் பண்பாட்டுக் காலத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. மஞ்சாய்கள் தற்கால லிமா நகரைச் சூழ கி.மு. 1500 தொடக்கம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்களாவர்.

அவர்கள் சூரியோதயத்தை நோக்கிய ஆங்கில எழுத்தான யூ வடிவ கோவில்களை கட்டியதில் பிரபலமானவர்களாவர்.

அவ்வாறான யூ வடிவக் கோவில் ஒன்றின் மையப் பகுதியிலேயே இந்த மம்மி வைக்கப்பட்டிருப்பதாக அகுய்லர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உடல் பருத்தி மற்றும் காய்கறி நார்களால் செய்யப்பட்ட துணியால் சுற்றப்பட்டிருந்தது. இந்த நபர் கோவிலின் நிர்மாணப் பணியின் கடைசி கட்டத்தில் பலியிடப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த உடலுடன் சோளம், கொக்கோ இலைகள் மற்றும் விதைகள் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பலியிடுவதற்காக வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Sun, 06/18/2023 - 17:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை