ரஷய வன தககதலல சரயவல 13 பர பல

வட மேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டிருப்பதாக போர் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்லிப் பிராந்தியத்தில் உள்ள மரக்கறி சந்தையில் இடம்பெற்ற தாக்குதலிலேயே அதிகம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒன்பது சிறுவர்கள் உட்பட ஒன்பது பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

சிரியாவில் ரஷ்யா இந்த ஆண்டில் நடத்திய அதிக உயிரிழப்புகள் கொண்ட தாக்குதல் இதுவென்று பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு ஆதரவாகச் செயற்படும் ரஷ்ய படை கடந்த வாரம் கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக நடத்திய தாக்குதல் ஒன்றில் இரு சிறுவர்கள் உட்பட நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இது குறித்து ரஷ்யா எந்த கருத்தையும் கூறவில்லை. படுகாயம் அடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த ஆண்டு சிரியாவில் நடந்த மோசமான சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 06/27/2023 - 09:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை