செயற்கை நுண்ணறிவின் அபாயம் குறித்து பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், செயற்கை நுண்ணறிவின் அபாயங்கள் குறித்துப் பேச பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துள்ளனர்.

கூகுள், மைக்ரோசொப்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து எத்தகைய பாதுகாப்புக் கவசம் உள்ளது என்று அவர்கள் வினவினர்.

கமலா ஹாரிஸ் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு நிறுவனங்களுக்கு இருப்பதாக வலியுறுத்தினார்.

சாட்–ஜி.பீ.டீ போன்ற தளங்கள் பற்றியக் கவலை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவும் சீனாவும் செயற்கை நுண்ணறிவு ஆயுதப் போட்டியில் இறங்கியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

செயற்கை நுண்ணறிவின் தந்தை என்று அழைக்கப்படும் ஜெப்ரி ஹின்டன், அண்மையில் கூகுளில் தனது பணிக்கு விடைகொடுத்ததோடு, தனது பணிகளுக்காக வருந்துவதாகவும் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு சாட்பொட்ஸ்களின் சில ஆபத்துகள் சற்றுப் பயமுறுத்துவதாக உள்ளது என்று பி.பி.சி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

Sun, 05/07/2023 - 16:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை