சீன முதல் பயணி விமானம் பறந்தது

சீனாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் அதன் முதல் பயணத்தை நேற்று காலை (28) மேற்கொண்டது.

சி919 விமானம் ஷங்ஹாயிலிருந்து பீஜிங்கிற்கு வெற்றிகரமாகப் பறந்ததைச் சீனாவின் அரசாங்கத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. விமானத்தில் 130க்கும் அதிகமான பயணிகள் சுமார் 3 மணிநேரம் பயணம் செய்தனர். அது மீண்டும் பீஜிங்கிற்கு திரும்பியது.

சீனாவின் வர்த்தக விமான கூட்டு நிறுவனம் 164 இருக்கைகள் கொண்ட விமானத்தைக் கட்டியது. ஏர்பஸ், போயிங் நிறுவனங்கள் ஒற்றை நடைபாதையைக் கொண்ட விமானங்களைக் கட்டுவதில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதை உடைக்க சீனா முயற்சிக்கிறது.

சைனா ஈஸ்ட் விமான நிறுவனம் மேற்படி நிறுவனத்திடமிருந்து 5 விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

சி919 விமானத்தை வாங்குவதற்குத் தற்போது 1,200க்கும் அதிகமான முன்பதிவுகள் உள்ளதாக அது தெரிவித்தது.

Mon, 05/29/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை