உக்ரைன், ரஷ்யாவுக்கு போரில் பாரிய இழப்பு

உக்ரைனின் பக்மூத் நகரில் உக்கிர மோதல் நீடித்து வரும் நிலையில் எதிர்த்தரப்பின் பெரும் இழப்புகள் பற்றி ரஷ்யா மற்றும் உக்ரைன் இரு தரப்பும் குறிப்பிட்டுள்ளன.

இந்த கிழக்கு உக்ரைனிய நகரை கைப்பற்ற ரஷ்யா முயன்று வரும் நிலையில் மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

கடந்த சில நாட்களில் ரஷ்யாவின் 1,100க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு மேலும் பலர் கடுகாயம் அடைந்திருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மறுபுறம் கடந்த 24 மணி நேரத்திற்குள் 220க்கும் அகதிமான உக்ரைனிய படையினரைக் கொன்றதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்தக் கூற்றுகளை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பக்மூத் நகரை கைப்பற்றும் பட்சத்தில் ஒட்டுமொத்த டொனட்ஸ்க் பிராந்தியத்தை கட்டுப்படுத்தும் ரஷ்யாவின் இலக்கு சாத்தியமாகும் வாய்ப்பு உள்ளது. கடந்த செப்டெம்பரில் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தனது ஆட்புலத்திற்குள் இணைத்த கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் நான்கு பிராந்தியங்களில் ஒன்றாக டொனட்ஸ்க் உள்ளது.

Tue, 03/14/2023 - 10:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை