பாகிஸ்தான் தலிபான்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் பிரதேசங்களில் அதிகரித்துவரும் தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் தலிபான்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு வசரிஸ்தானின் அரசியல் செயற்பாட்டாளர்கள், குடியிருப்பாளர்கள், தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குளிர்காலத்தையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டதோடு தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் தலிபான்களின் தீவிரவாத செயற்பாடுகளையும் குற்றச்செயல்களையும் கட்டுப்படுத்தி பிராந்தியத்தில் நீடித்து நிலைக்கக்கூடிய அமைதியை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Thu, 01/19/2023 - 12:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை