75ஆவது சுதந்திர தினம்; அரச நிறுவனங்களில் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடி பறக்கவிடல்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ஒரு வார காலத்திற்கு அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்க விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் பெப்ரவரி 01ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை அனைத்து அரச கட்டடங்களிலும் தேசிய கொடியை பறக்க விடுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அந்த சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 01/30/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை