நேபாள புதிய பிரதமராக பிரசண்டா பதவி ஏற்றார்

நேபாளத்தின் ஆளும் கூட்டணியில் இருந்து திடீரென விலகிய முன்னாள் மாவோயிஸ்ட் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்ற பிரசண்டா (68) அந்நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று (26) நடைபெற்றது.

தற்போதைய பிரதமராக உள்ள ஷேர் பகதூர் தேவுபாவே தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பார் எனத் தகவல்கள் வெளியான நிலையில், இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அந்நாட்டில் நீடித்து வந்த பரபரப்பான சூழலுக்கு முடிவு எட்டப்பட்டுள்ளது.

ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறிய பிரசண்டா, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான கே.பி.சர்மா ஓலியுடன் கூட்டணி அமைத்தார். அக்கூட்டணி தற்போது பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், நாட்டின் பிரதமராக பிரசண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவியேற்ற பிரசண்டா 2025 வரை அந்தப் பதியில் நிடித்த பின் கூட்டணி கட்சிக்கு அந்தப் பதவியை வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Tue, 12/27/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை