முன்னாள் பாப்பரசர் 16ஆவது பெனடிக்ட் 95ஆவது வயதில் காலமானார்

முன்னாள் பாப்பரசரான 16ஆவது பெனடிக்ட், தனது 95 ஆவது வயதில் காலமானார்.

இதுகுறித்து வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் எமரிட்டஸ் 16ஆம் பெனடிக்ட் இன்று காலை 9.34 மணிக்கு வத்திக்கானில் உள்ள மேட்டர் எக்லேசியா Mater (Ecclesiae Monastery) மடாலயத்தில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

போப் பெனடிக்ட்டின் உடல், "விசுவாசிகளின் வாழ்த்துக்காக" ஜனவரி 02 முதல் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் வைக்கப்படும் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.

போப் பெனடிக்ட்டின் இறுதி ஊர்வலத்திற்கான திட்டங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.

போப் பெனடிக்ட்டின் இறுதி ஊர்வலத்திற்கான திட்டங்கள் அடுத்த சில மணிநேரங்களில் அறிவிக்கப்படும் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.

முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல் நிலை மோசமடைந்திருப்பதாகவும் வத்திக்கான் வந்திருக்கும் யாத்திரிகர்கள் அவருக்காக பிரார்த்திக்கும்படியும் பாப்பரசர் பிரான்சிஸ் ஓரிரு தினங்களுக்கு முன் கேட்டுக்கொண்டிருந்தார்.

பாப்பரசர் பெனடிக்ட் 600 ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருச்சபையில் முதல் பாப்பரசராக 2013 ஆம் ஆண்டு பதவி விலகினார். தனது வயது மூப்பு காரணமாகவே அவர் அந்த முடிவை எடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆண்டின் இறுதி யாத்திரிகர் சந்திப்பில் பங்கேற்ற பதவியில் உள்ள பாப்பரசர் பிரான்சிஸ், முன்னாள் பாப்பரசர் பெனடிக்டுக்காக விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

அண்மைய மணி நேரங்களில் முன்னாள் பாப்பரசரின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது. “நிலைமை தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து சோதித்து வருகின்றனர்” என்று பேச்சாளர் மட்டியோ புரூனி தெரிவித்தார்.

Sat, 12/31/2022 - 16:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை