சீனாவில் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு

சீனாவில் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை ஒட்டி தலைநகர் பீஜிங்கிலும் ஷங்ஹாய் நகரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் உரிமையை மதிக்கும்படி சீனாவை ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டது.

ஆர்ப்பாட்டம் செய்வதற்காக மக்கள் திரண்ட பீஜிங்கில் சந்திப்பில் பாதுகாப்பு பிரிவினர் அவர்களுக்காகக் காத்திருந்தனர். பெரிய அளவில் பேரணி நடத்துவதற்கு இணையத்தில் விடுக்கப்பட்ட அழைப்பை ஒட்டி அதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைச் சீனா எடுத்துள்ளது. சிறிய அளவில் மட்டுமே மக்கள் திரண்டதாக சமூக ஊடகங்கள் கூறுகின்றன. ஷங்ஹாய் நகரிலும் கடந்த திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் முன்கூட்டியே நேற்று தடுப்பு போடப்பட்டுள்ளது. திங்கள் இரவு ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற அந்த இடத்தில் நேற்று அமைதி நிலவியது.

சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டதாகவும் பாதுகாப்பு பிரிவினர் பலரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொவிட் தொற்றை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஜனாதிபதி ஷி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் கொடுத்தனர்.

Wed, 11/30/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை