உபயோகத்துக்கு உதவாத ரயில் தண்டவாளங்கள்

வெளிநாடுகளுக்கு விற்க அரசு தீர்மானம்

 

நாடு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி நிலையில் பாவனைக்குதவாத ரயில் தண்டவாளங்களை  சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கம் நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கூட சவால்களை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள ரயில் தண்டவாளங்களை சர்வதேச விலைமனுகோரல் மூலமாக விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் அசோக அபேசிங்க எம்பி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

ரயில் சேவைகளை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கு தேவையான அடிப்படை உபகரணங்களை கொள்வனவு செய்வதிலும் நிதி நெருக்கடி காணப்படுகிறது.

அதனைக் கருத்திற்கொண்டே பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள ரயில் தண்டவாளங்களை சர்வதேச விலை மனுக்கோரலுக்கிணங்க விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 09/22/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை