ஈராக்கில் சுட்டெரிக்கும் வெப்பம்: அரச ஊழியர்களுக்கு விடுமுறை

ஈராக்கின் பல பகுதிகளிலும் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்ததை அடுத்து அரச ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல நகரங்களும் கடந்த வியாழக்கிழமை உலகின் அதிக வெப்பமான பகுதிகளாக பதிவாகின. சுட்டெரிக்கும் வெப்பம் காரணமான குறைந்தது 10 மாகாணங்களில் அரச ஊழியர்களுக்கான பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம் தொடக்கம் ஈராக்கில் வெப்ப அலை பாதிக்கப்பட்டிருப்பதோடு இந்தக் காலநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

எரிக்கும் வெப்பம் ஈராக்கில் அசாதாரணமானது இல்லை என்பதோடு அது உலகின் அதிக வெப்பமான இடங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஆனால் நிலைமை மோசமாக இருப்பதாக குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர்.

தெற்கு துறைமுகமான பஸ்ராவில் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவு உச்சம் பெற்றிருக்கும் நிலையில் அங்கு அரச ஊழியர்களுக்கு நான்கு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Sun, 08/07/2022 - 13:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை