ஒரு சில தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதான தடை நீக்கம்

Rizwan Segu Mohideen

- பாதுகாப்பு அமைச்சினால் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பட்டியல் புதுப்பிப்பு
- LTTE, NTJ உள்ளிட்ட 15 அமைப்புகள், 316 தனிநபர்கள் தொடர்ந்தும் தடைப் பட்டியலில்

இலங்கையில் ஒரு சில சர்வதேச தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி, பாதுகாப்பு அமைச்சினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் 4 (7)ஆம் ஒழுங்குவிதியின் கீழ் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை பாதுகாப்பு அமைச்சு மீண்டும் வெளியிட்டுள்ளது.

குறித்த பட்டியலில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருந்த, ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் தடை செய்யப்பட்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Global Tamil Forum, British Tamil Forum (BTF), Canadian Tamil Congress (CTC), Australian Tamil Congress (ATC), Tamil Ealam People's Federation, Tamil Youth Organisation உள்ளிட்ட அமைப்புகள் குறித்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

அத்துடன், உலகத் தமிழ் பேரவையின் பேச்சாளரான சுரேன் சுரேந்தினது பெயர், தடை செய்யப்பட்ட தனிநபர்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, நாட்டில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தமீழழ விடுதலைப் புலிகள் (LTTE), ஸஹ்ரான் ஹாஷிமின் தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) உள்ளிட்ட 15 அமைப்புகள் மற்றும் 316 தனிநபர்களை தொடர்ந்தும் இலங்கையில் தடைப் பட்டியலில் இணைத்து, குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

றிஸ்வான் சேகு முகைதீன்

Sun, 08/14/2022 - 13:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை