மேற்குக்கரையில் இஸ்ரேல் சுற்றிவளைப்பு: மூவர் பலி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரான நப்லூஸில் இஸ்ரேலிய படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் மூத்த போராட்டத் தளபதி ஒருவர் உட்பட பலஸ்தீனர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

“நப்லூஸ் நகரில் பயங்கரவாதியான இப்ராஹிம் அல் நபுல்சி கொல்லப்பட்டார்” என்று இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த வீட்டில் தங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குக் கரை யில் இயங்கும் முக்கிய போராட்டக் குழுவான அல் அக்ஸா தியாகப் படையணியின் தளபதி ஒருவராக நபுல்சி இயங்கி வந்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவத்துடன் நப்லூஸின் ஏனைய பகுதிகளிலும் மோதல் வெடித்துள்ளது. துருப்புகள் மீது பலஸ்தீனர்கள் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் குறைந்தது 40 பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.

காசாவில் கடந்த மூன்று நாட்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 46 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே மேற்குக் கரையில் இந்த வன்முறை வெடித்துள்ளது.

Wed, 08/10/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை