அமைச்சரவையில் மீண்டும் ஒத்திவைப்பு

21 ஆவது திருத்தச் சட்டமூலம்:

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதை அமைச்சரவை மேலும் ஒத்திவைத்துள்ளது. அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டம் அரசியல் கட்சித் தலைவர்களை மேலும் தெளிவுபடுத்த வேண்டியதன் காரணமாக நேற்று முன்தினம் (13) அமைச்சரவையில் நிறைவேற்றப்படவில்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ

தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை வியாழக்கிழமை புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பல கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

Wed, 06/15/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை