ஆர்ப்பாட்டக்காரர்கள் பயணித்த பஸ்கள் மீது தாக்குதல், தீவைப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக கொழும்பிற்கு ஆதரவாளர்களை ஏற்றி வந்த பல பஸ்கள் மீது கொழும்பில் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹரகமவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பஸ்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் பொதுஜன முன்னணி ஆதரவாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. சில பஸ்கள் மீது தீவைக்கப்பட்டதாகவும் பொஜன பெரமுன உள்ளூராட்சி உறுப்பினர்கள் பயணித்த வாகனங்கள் மீதும் சில இடங்களில் தாக்கப்பட்டுள்ளன. (பா) 

Tue, 05/10/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை