பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

- ஊரடங்கு அமுலில் உள்ள காலத்தில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

கொழும்பு உட்பட நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் குழப்பகரமான சூழ்நிலையையடுத்து நாடளாவிய ரீதியில் புதன்கிழமை (11) காலை 7.00 மணி வரை வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் நடைமுறையிலுள்ள நிலையில் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் அமைதியான சூழ்நிலையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அனைத்து மக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என கலால் வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 05/10/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை