எரிபொருளை ஏற்றிவந்த கப்பலுக்கான பணம் இன்னும் கிடைக்கவில்லை

மேலும் 02 நாட்களுக்கு விநியோக சிக்கல்

 

நாட்டில் பெற்றோல் கையிருப்பு வரையறுக்கப்பட்ட அளவிலேயே உள்ளது. ஒக்டேன் 92 மற்றும் 95 பெற்றோலை கொண்ட கப்பல் ஒன்று இலங்கை கடல் எல்லைக்கருகிலுள்ளது. எனினும்இதனை விடுவிப்பதற்காக  இதுவரை பணம் எதுவும் கிடைக்கவில்லையெனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமைக்கு திரும்ப மேலும் இரண்டு நாட்கள் செல்லுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது கையிருப்பிலுள்ள டீசல் சில நாட்களுக்கு போதுமானதாக இருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Thu, 05/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை