ஜனாதிபதிக்கு எதிரான யோசனைக்கு ஆதரவில்லை

வாசுதேவ நாணயக்கார MP தெரிவிப்பு

ஜனாதிபதிக்கு எதிராகக் கொண்டு வரப்படும் எவ்வித யோசனைக்கும் தமது அணியினர் ஆதரவளிக்க மாட்டார்களென ஆளும் கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக  இயங்கும் 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

11 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் எந்த அர்த்தமும் இல்லாத யோசனை எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வாசுதேவ நாணயக்கார செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட பின்னர், கருத்து தெரிவித்த உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்காரவின் நிலைப்பாட்டுக்கு இணையான கருத்தையே வெளியிட்டுள்ளார்.

Thu, 05/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை