ஷங்ஹாயில் நுழைவு பரீட்சை ஒத்திவைப்பு

கொரோனா தொற்று பரவல் காரணமாக சீனாவின் சங்ஹாய் மாநகர அரசு கல்லூரி மற்றும் சிரேஷ்ட உயர் பாடசாலை நுழைவுப் பரீட்சைகளை ஒரு மாதத்திற்கு பிற்போட்டுள்ளது.

வரும் ஜூலை 7 தொடக்கம் 9 ஆம் திகதி வரை நடைபெறும் கல்லூரி நுழைவு பரீட்சைகளுக்காக 50,000க்கும் அதிகமானவர்கள் தோற்றுகின்றனர். அதேபோன்று வரும் ஜூலை 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறும் சிரேஷ் உயர் பாடசாலை நுழைவு பரீட்சையில் 110,000 மாணவர்கள் தோற்றுகின்றனர். சீனாவின் வர்த்தக மையமாக இருக்கும் ஷங்ஹாய் நகர் நாட்டின் கொரோனா தொற்றின் மையப் புள்ளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 05/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை