4 நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்கத் தயார்

PM Position-Sajith Premadasa Writes to President

- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதிக்கு கடிதம்

தாம் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என முடிவு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

அண்மையில் தாங்கள் தொலைபேசி மூலம் அழைத்து, பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு முன்வைத்த யோசனை மற்றும் கௌரவ மகா சங்கத்தினரினதும் ஏனைய மதத் தலைவர்களின் கோரிக்கைக்கு அமையவும் பல்வேறு கட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களுக்கும் அமைய பின்வரும் விடயங்களுக்கு இணங்குவது அடிப்படையில் எதிர்க்கட்சியின் பிரதான கட்சி எனும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பு தலைமையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஒரு குறுகிய காலத்துக்குள் அரசாங்கத்தை நிறுவ ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு தலைவர் எனும் வகையில் பிரதமர் பதவியை பொறுப்பேற்க தீர்மானித்துள்ளதை நான் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

நீங்கள் நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரைக்கு அமைய,

உறுதியாக குறிப்பிடும் குறுகிய காலத்திற்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக இணங்குதல்
இரண்டு வாரங்களுக்குள் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் செயற்படுத்தல்
எம்மால் தற்பொழுது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய மிகவும் குறுகிய காலத்திற்குள் அனைத்து கட்சிகளுடன் ஒத்துழைப்புடன்  செற்படுதல்.
மக்களின் அன்றாட வாழ்கையை சுமூகமாக்கி, சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தி மேற்படி அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்ந்து நிலையான அரசை நிறுவுவதற்காக மக்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு பாராளுமன்றத் தேர்தலை நடாத்துதல்

மேற்படி அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தி எதிர்காலத்தில் மேலும் வீழ்ச்சி அடையப்போகும் பொருளாதாரத்தை  கட்டுப்படுத்துவதற்காக என்னிடமும் எமது குழுவினருக்கும் நிலைபேறான தெளிவான திட்டங்கள் உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

மேற்படி விடயங்களுக்கு அமைய புதிய குறுகிய கால அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பிலும் நாளைய தினம் புதிய அரசாங்கம் பதவி பிரமாணம் செய்வதற்கான உரிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாட தயாராக உள்ளேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எழுதியுள்ள குறித்த கடிதம் வருமாறு...

Thu, 05/12/2022 - 15:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை